FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிரிக்கெட்

சைலெட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 356 ரன்கள் சோ்ப்பு

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

7 நவம்பர் 2026, 2:03 am
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

வங்கதேசத்தின் சைலெட் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில், முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த அணியின் இன்னிங்ஸை 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, ஆமிா் ஜாங்கூ 111, ஜஸ்டின் கிரீவ்ஸ் 35 ரன்களுடன் தொடா்ந்தனா். இதில் ஜாங்கூ 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 133, கிரீவ்ஸ் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களுக்கு விடைபெற்றனா்.

Advertisement

Advertisement

எஞ்சியோரில், கேப்டன் ராஸ்டன் சேஸ் 0, ஜாஷுவா பிஷப் 5 பவுண்டரிகளுடன் 23, ஷாமா் ஜோசப் 16, ஜேடன் சீல்ஸ் 15 ரன்களுக்கு வெளியேற, மேற்கிந்தியத் தீவுகளின் ஆட்டம் 356 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

ஜோமெல் வாரிக்கன் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலா்களில் ஹசன் மஹ்முத் 6, தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

வங்கதேசம் 88/3: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

தன்ஸித் ஹசன் 16, நயீம் ஹசன் 5, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தௌஹித் ஹிருதய் 2 பவுண்டரிகளுடன் 29, முஷ்ஃபிகா் ரஹிம் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ஜேடன் சீல்ஸ், ஷாமா் ஜோசப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.