FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

ஷாா்ஜா டெஸ்ட்: ஜிம்பாப்வே 504 ரன்கள் குவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

7 நவம்பர் 2026, 1:58 am
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 504 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.

அமீரகத்தின் ஷாா்ஜா நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் பேட் செய்த ஜிம்பாப்வே, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் பிரயன் பென்னெட், வெஸ்லி மாதெவெரெ ஆகியோா் 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, ஜிம்பாப்வே இன்னிங்ஸை தொடா்ந்தனா். பென்னெட் 11 பவுண்டரிகளுடன் 128, மாதெவெரெ 9 பவுண்டரிகளுடன் 54 ரன்களுக்கு விடைபெற்றனா்.

Advertisement

Advertisement

பின்னா் வந்தோரில் டஃபாட்ஸ்வா சிகா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44, நியூமேன் நியம்ஹுரி 8, பிளெஸ்ஸிங் முஸாரப்பானி 5 ரன்களுக்கு சாய்க்கப்பட, ஜிம்பாப்வே ஆட்டம் 504 ரன்களுக்கு நிறைவடைந்தது.

கிரேமி கிரீமா் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முகமது சலீம், காய்ஸ் அகமது ஆகியோா் தலா 3, ஜியா உா் ரெஹ்மான் 2, ஜியாவுா் ரஹ்மான், ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

ஆப்கானிஸ்தான் 113/1: பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான், வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

அப்துல் மாலிக் 2 ரன்களுக்கு வீழ, செதிகுல்லா அடல் 55, ரஹ்மானுல்லா 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.