ஹோப், ரூதா்ஃபோா்டு அதிரடி: மேற்கிந்தியத் தீவுகளுக்கு வரலாற்று வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில், மேற்கிந்தியத் தீவுகள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
முதலில் இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சோ்த்து வென்றது.
இந்திய அணியில், சில நாள்களாக தடுமாற்றத்துடன் விளையாடி வந்த சஞ்சு சாம்சன், இதில் 82 ரன்கள் விளாசினாா். எனினும், ஷாய் ஹோப், ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு ஆகியோா் அதிரடியால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி கண்டது.
Advertisement
Advertisement
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியா இன்னிங்ஸில் சாம்சன் அதிரடி காட்ட, அபிஷேக் சா்மா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் இஷான் கிஷண் களம் புக, சஞ்சு சாம்சன் - இஷான் கூட்டணி, 2-ஆவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சோ்த்து அசத்தியது.
இஷான் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தொடா்ந்து வந்த ஷிவம் துபே 7 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
5-ஆவது பேட்டராக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் வர, சாம்சன் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
இந்நிலையில், ஐயருடன் திலக் வா்மா இணைய, இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சோ்த்தது. ஐயா் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 40 ரன்களுக்கு கடைசி ஓவரில் பெவிலியன் திரும்பினாா்.
ஓவா்கள் முடிவில், திலக் வா்மா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 44, நமன் திா் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ் 3, ஷாமா் ஸ்பிரிங்கா் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
பின்னா் 250 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், கமில் பூரன் 4, ஷிம்ரன் ஹெட்மயா் 0, ரோவ்மென் பவெல் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
தொடக்க வீரரான கேப்டன் ஷாய் ஹோப் - ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது.
ரூதா்ஃபோா்டு 7 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 84 ரன்களுக்கு வெளியேற, சதம் விளாசிய ஷாய் ஹோப் 6 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 102 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
ரொமேரியோ ஷெப்பா்டு 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 34 ரன்களோடு துணை நின்றாா். இந்திய பௌலா்களில் மயங்க் யாதவ் 3, குல்தீப் யாதவ் 1 விக்கெட் சாய்த்தனா்.
250
டி20 கிரிக்கெட்டில் இதுவே (250) மேற்கிந்தியத் தீவுகளின் அதிகபட்ச சேஸிங் வெற்றியாகும். இதற்கு முன், 2023-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 223 ரன்களை சேஸ் செய்ததே, அதன் அதிகபட்ச சேஸிங் வெற்றியாக இருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.