FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

4-வது டி20: சதம் விளாசிய சாய் ஹோப்; இந்தியாவுக்கு 248 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.

14 அக்டோபர் 2026, 9:23 pm IST
பந்தை சிக்ஸருக்கு விளாசும் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் சாய் ஹோப் - படம் | AP
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான நான்காவது டி20 போட்டி ஹைதராபாதில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

சதம் விளாசிய சாய் ஹோப்; இந்தியாவுக்கு 248 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் சாய் ஹோப் மற்றும் ஜுவெல் ஆண்ட்ரூ அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், ஆண்ட்ரூ 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், ஷிம்ரன் ஹெட்மேயர் 12 பந்துகளில் 33 ரன்களும் (4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ரோவ்மன் பௌவல் 17 பந்துகளில் 24 ரன்களும் (2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர்.

தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சாய் ஹோப் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 50 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அவருடன் மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் 26 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ் மற்றும் அக்‌ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

summary

Batting first in the fourth T20 match against India, the West Indies scored 247 runs for the loss of 3 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments