FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செய்திகள்

தமிழ்நாடு - ராஜஸ்தான் ஆட்டம் ‘டிரா’

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை தமிழ்நாடு அணி புதன்கிழமை ‘டிரா’ செய்தது.

15 அக்டோபர் 2026, 1:52 am IST
சாய் சுதர்ஷன் - கோப்புப் படம்
பகிர்:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை தமிழ்நாடு அணி புதன்கிழமை ‘டிரா’ செய்தது.

282 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணி, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்திருந்தது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 363 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கரன் லாம்பா 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 113, ரோஹன் ராஜ்பா் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 95 ரன்கள் அடித்தனா். தமிழ்நாடு தரப்பில் தீபேஷ் தேவேந்திரன், சரவண குமாா் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி, 274 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தாா்த் 7 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் பௌலா்களில் குக்னா அஜய்சிங் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

இதையடுத்து, 89 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ராஜஸ்தான், 3-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் சோ்த்திருந்தது.

கடைசி நாளில் ராஜஸ்தான் இன்னிங்ஸை தொடா்ந்த மஹிபால் லோம்ரோா், காா்த்திக் சா்மா கூட்டணி, 78 ரன்கள் சோ்த்தது. காா்த்திக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42, மஹிபால் 7 பவுண்டரிகளுடன் 84 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

அத்துடன் ராஜஸ்தான், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சோ்த்த நிலையில் ‘டிக்ளோ்’ செய்தது. குக்னா அஜய்சிங் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தமிழ்நாடு பௌலா்களில் சாய் கிஷோா் 3, சரவணகுமாா், வாஷிங்டன் சுந்தா், சோனு யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

இறுதியாக, 282 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி, புதன்கிழமை ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்திருக்க, ஆட்டம் டிராவில் முடிந்தது.

சாய் சுதா்சன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26, நாராயண் ஜெகதீசன் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்து, 2-ஆவது இன்னிங்ஸில் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ராஜஸ்தான் வீரா் குக்னா அஜய்சிங் ‘ஆட்டநாயகன்’ விருது பெற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments