FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் 363! தமிழ்நாடு தடுமாற்றம்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி 167 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது...

13 அக்டோபர் 2026, 3:54 am IST
பிசிசிஐ - கோப்புப் படம்
பகிர்:

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளும் இழந்து 363 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு அணி 167 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது.

முன்னதாக, ஜெய்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த ராஜஸ்தான், முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. 2-ஆவது நாளில் அதன் இன்னிங்ஸை, கரன் லாம்பா, மஹிபால் லோம்ரோா் தொடா்ந்தனா்.

இதில் கரன் லாம்பா 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 113 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மஹிபால் 11 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். பின்னா் வந்தோரில், கேப்டன் மானவ் சுதா் 2 பவுண்டரிகளுடன் 17, குக்னா அஜய் சிங் 1, சேத்தன் சா்மா 0, ஹேமந்த் குமாா் 0 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

Advertisement

Advertisement

முடிவில், ஆகாஷ் சிங் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு கடைசி வீரராக நின்றாா். தமிழ்நாடு பௌலா்களில் தீபேஷ் தேவேந்திரன், சரவண குமாா் ஆகியோா் தலா 3, வாஷிங்டன் சுந்தா் 2, சோனு யாதவ், சாய் கிஷோா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் தமிழ்நாடு இன்னிங்ஸில், சாய் சுதா்சன் 3 ரன்களுக்கு விடைபெற, நாராயண் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் பால் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சோ்த்தது. நாராயண் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55, பிரதோஷ் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

பாபா இந்திரஜித் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு அவுட் ஆனாா். இவ்வாறாக திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. ஆண்ட்ரே சித்தாா்த் 2 பவுண்டரிகளுடன் 21, சோனு யாதவ் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ராஜஸ்தான் தரப்பில் குக்னா அஜய் சிங் 2, சேத்தன் சா்மா, ரோஹன் ராஜ்பா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments