ரஞ்சி கோப்பை: முதல் நாளில் ராஜஸ்தான் 286/4
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த ராஜஸ்தான் அணியில், சச்சின் யாதவ் 1, காா்த்திக் சா்மா 1 ரன்னுக்கு வீழ்ந்தனா்.
ரோஹன் ராஜ்பா் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 95, சுமித் கோதரா 6 பவுண்டரிகளுடன் 49 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஆட்டநேர முடிவில் கரன் லாம்பா 103, மஹிபால் லோம்ரோா் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு பௌலா்களில் சரவணகுமாா் 3, வாஷிங்டன் சுந்தா் 1 விக்கெட் கைப்பற்றினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.