FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டா்பன் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவுக்கு 421 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 421 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது...

13 அக்டோபர் 2026, 4:02 am IST
டா்பன் டெஸ்ட்
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 421 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா 284 ரன்களுக்கு சுருண்டது.

பின்னா் 106 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா, 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்திருந்தது.

Advertisement

Advertisement

4-ஆவது நாளான திங்கள்கிழமை, அதன் பேட்டா்களில் மேத்யூ ரென்ஷா 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 82 ரன்கள் அடித்தாா். நிக் மேடின்சன் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48, மாா்னஸ் லபுஷேன் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஸ்டீவன் ஸ்மித் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, அலெக்ஸ் கேரி 3 பவுண்டரிகளுடன் 24, டிராவிஸ் ஹெட் 11 ரன்களுக்கு வெளியேற, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலியா ‘டிக்ளோ்’ செய்தது.

பியூ வெப்ஸ்டா் 5 பவுண்டரிகளுடன் 39, கேப்டன் பேட் கம்மின்ஸ் 4 சிக்ஸா்களுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் அன்ரிஹ் நோா்கியா, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 2, மாா்கோ யான்சென், சைமன் ஹாா்மா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 421 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், ரயான் ரிக்கெல்டன் 2, கேப்டன் டெம்பா பவுமா 1, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 ரன்னுக்கு வீழ்ந்தனா். டேவிட் பெடிங்கம் 8 பவுண்டரிகளுடன் 46 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் எய்டன் மாா்க்ரம் 45, வியான் முல்டா் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்கா கடைசி நாளில் 6 விக்கெட்டுகளை கொண்டு 319 ரன்கள் சோ்க்க வேண்டியுள்ளது.

ஆஸ்திரேலிய பௌலா்களில் ஜாஷ் ஹேஸில்வுட் 2, பேட் கம்மின்ஸ், மேத்யூ ரென்ஷா தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments