FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அபிஷேக் சர்மா அதிரடி: ஆப்கனுக்கு எதிரான முதல் டி20-ல் இந்திய அணி அபார வெற்றி!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

14 செப்டம்பர் 2026, 5:01 am IST
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் சேர்க்க, இந்தியா 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் முகமது நபி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 33, ரஹ்மானுல்லா குர்பாஸ் 0, கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

Advertisement

Advertisement

செதிகுல்லா அடல் 13, குல்பதின் நயிப் 2, டார்விஷ் ரசூலி 2, ரஷீத் கான் 1, நூர் அகமது 0 ரன்களுக்கு வெளியேறினர். ஓவர்கள் முடிவில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முஜீப் உர் ரஹ்மான் 9 ரன்களுடன் துணை நின்றார்.

இந்திய பெüலர்களில் அர்ஷ்தீப் சிங் 3, ஜஸ்பிரீத் பும்ரா, அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் இந்திய இன்னிங்ஸில் சஞ்சு சாம்சன் 10 ரன்களுக்கு வெளியேற, அபிஷேக் சர்மா - இஷான் கிஷண் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டது. அபிஷேக் 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 82, இஷான் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 8, திலக் வர்மா 3 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 1 விக்கெட் வீழ்த்தினர்.

முதல்முறையாக "வந்தே மாதரம்': மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, இந்த ஆட்டம் தொடங்கும் முன், இந்திய தேசிய கீதத்துக்கு முன்பாக, பங்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய "வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments