முகப்பு
கிரிக்கெட்

சிறப்பான பயணத்தை தொடங்கியுள்ளீர்கள்; சூர்யவன்ஷிக்கு சூர்யகுமார் யாதவ் வாழ்த்து!

இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Updated On : 7 ஜூலை 2026, 5:36 pm IST
வைபவ் சூர்யவன்ஷி - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்பாக, அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அணியில் இடம்பெற்றபோதிலும், வைபவ் சூர்யவன்ஷி விளையாடவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம், சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான மிகவும் இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி மிகவும் சிறப்பான பயணத்தைத் தொடங்கியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்திய அணியை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அணிக்கு எப்போதும் சிறந்த விஷயங்கள் நடைபெற வேண்டும் என விரும்புகிறேன். இந்திய அணியில் உள்ள வீரர்கள் தங்களது திறமையையும் வெளிப்படுத்தி விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் தனது சிறப்பான பயணத்தைத் தொடங்கியுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாக விளையாடுங்கள். தொடர்ந்து நாட்டை பெருமையடையச் செய்யுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அண்மையில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian team captain Suryakumar Yadav has extended his best wishes to young Indian player Vaibhav Suryavanshi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments