முகப்பு
கிரிக்கெட்

ஜிம்பாப்வே டி20 தொடரில் சஞ்சு சாம்சன் நீக்கம்; அணியில் 3 அறிமுக வீரர்கள்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூலை 6) அறிவித்துள்ளது.

Updated On : 6 ஜூலை 2026, 8:12 pm IST
இந்திய வீரர் சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூலை 6) அறிவித்துள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூலை 6) அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் யஷ் தாக்குர், அசோக் சர்மா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் முதல் முறையாக தேசிய அணியில் இடம்பெற்றுள்ளனர். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சோபிக்கவில்லை. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சரியாக விளையாடாத நிலையில், அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணைக் கேப்டன்), இஷான் கிஷன், ஷிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், யஷ் தாக்குர், அசோக் சர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங்.

summary

Samson dropped from Zimbabwe T20s; maiden call-ups for Yash, Ashok, Prabhsimran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments