தோனி, கோலியை டென்னிஸ் வீரர்களுடன் ஒப்பிட்டு பேசிய சஞ்சு சாம்சன்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருடனுன் ஒப்பிட்டு சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரருடனுன் ஒப்பிட்டு சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் மற்றும் கார்லோஸ் அல்கராஸை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலியுடன் ஒப்பிட்டு சஞ்சு சாம்சன் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக சஞ்சு சாம்சன் ஜியோஸ்டாரில் பேசியதாவது: கிரிக்கெட்டில் ரோஜர் ஃபெடரர் யாராக இருப்பார்? மகேந்திர சிங் தோனிதான் கிரிக்கெட்டின் ரோஜர் ஃபெடரராக இருப்பார். அவர் களத்தில் மிகவும் அமைதியாகவும் பொறுமையுடனும் செயல்படுவார். அவர் விளையாடுவது பார்ப்பதற்கு மிகவும் எளிதாக இருப்பது போன்று தெரிந்தாலும், அவரைப் போன்று விளையாடுவது கடினம்.
Advertisement
Advertisement
கார்லோஸ் அல்கராஸ் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். அவரை விராட் கோலியுடன் ஒப்பிடலாம். விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் என்றார்.
Sanju Samson has compared former Indian captain Mahendra Singh Dhoni with tennis player Roger Federer.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.