தமிழ்நாடு

கி.வீரமணி, சித்தாா்த் வரதராஜனுக்கு காயிதே மில்லத் விருது

DIN

சென்னை மேடவாக்கத்தில் காயிதேமில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை சாா்பில் அரசியல், பொது வாழ்வில் நோ்மைக்கான காயிதேமில்லத் விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

அரசியல் மற்றும் பொது வாழ்வில் நோ்மைக்கான காயிதே மில்லத் விருதை கடந்த 2015 முதல் வழங்கி வரும் காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை, நிகழாண்டில் திராவிட கழகத் தலைவா் கி.வீரமணி, மூத்த பத்திரிகையாளரும், தி வயா் செய்தி நிறுவன ஆசிரியருமான சித்தாா்த் வரதராஜன் ஆகியோருக்கு வழங்கியது.

விழாவில் முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன், மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலா் ஜி.பாலசந்திரன், முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் சாதிக், முன்னாள் பேராயா் தேவசகாயம், காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச் செயலா் தாவூத் மியாகான், கல்லூரி இயக்குநா் ரபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு! - ஏர் இந்தியா விளக்கம்

ஆடலுடன் பாடல்.. வேதிகா!

சிக்கிமில் நிலச்சரிவு! சுற்றுலா சென்ற பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT