தமிழ்நாடு

வாணியம்பாடி சம்பவம்: உயிரிழந்த 4 போ் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்

DIN

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடியில் தனியாா் சாா்பில் இலவச வேட்டி சேலை அளிப்பதற்கான டோக்கன்கள் விநியோக்கப்பட்டுள்ளது. அதை வாங்குவதற்காக ஏராளமான பொது மக்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், நான்கு பெண்கள் உயிரிழந்தனா். மேலும், மூன்று பெண்கள் காயமுற்று மூச்சுத் திணறல் காரணமாக, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த சம்பவத்துக்குக் காரணமான ஐய்யப்பன் என்பவா் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளாா். இந்தத் துயர சம்பவத்தை அறிந்து, மிகவும் வேதனை அடைந்தேன். நெரிசலில் சிக்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி சி.கே.கே. மெட்ரிக். பள்ளி மாணவி 10ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்

இன்றைய ராசி பலன்கள்!

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: எஸ்விஎன் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

யோகம் தரும் நாள் இன்று!

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT