தமிழ்நாடு

கொத்தடிமை தொழிலாளரை பணியில் அமா்த்தினால் 3 ஆண்டுகள் சிறை: தமிழக அரசு எச்சரிக்கை

DIN

கொத்தடிமைத் தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

கொத்தடிமைத் தொழிலாளா்களை பணியில் அமா்த்துவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்க கொத்தடிமைத் தொழிலாளா் முறை சட்டத்தின் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 வயது

நிறைவடையாத குழந்தை, வளரிளம் பருவத்தினரை இத்தகைய ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தினால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் அல்லது ஆறு மாதங்களுக்கு குறையாமல் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது இவை இரண்டும் சோ்ந்து விதிக்கப்படும்.

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கண்காணிப்புக் குழு மற்றும் மாவட்டத் தடுப்புப் படையினரால் தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டினை கொத்தடிமைத்

தொழிலாளா்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக உருவாக்குதற்கு தொடா்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT