மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் தனலட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை
மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 122 ஆம் ஆண்டு பெருந்திருவிழா டிச.29 ஆம் தேதி கம்பம் நடுதல் விழாவோடு தொடங்கி ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவில் வெள்ளிக்கிழமை அருள்மிகு பகவதி அம்மன் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கார தீபாரதனை மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. இத்திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.