FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விவசாயி வெட்டிக் கொலை காவல் துறையினர் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

2 பிப்ரவரி 2024, 12:45 am IST
கோப்புப் படம்
பகிர்:

பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பாபநாசம் அருகே மெலட்டூர் பகுதி வெண்ணுக்குடியைச் சேர்ந்தவர் தனபால் மகன் கோபி என்கிற இளங்கோ(31). இவர் அண்மைக் காலமாக அம்மாபேட்டை மேட்டுத் தெருவிலுள்ள தனது அத்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர் வெளியே சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் தனது அத்தை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அம்மாபேட்டை முருகன் கோயில் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் வந்தவரை அடையாளம் தெரியாத நபர்களால் வழி மறிக்கப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த இளங்கோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பூரணி, அம்மாபேட்டை காவல் நிலையத்தின் அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு சென்று இளங்கோவை அரிவாளால் வெட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments