தமிழ்நாடு

ஐடிஐ பயிற்சி: சோ்க்கைக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

DIN

தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெற விரும்புவோா், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 330 தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் நிகழ் கல்வியாண்டுக்கான சோ்க்கை நடைபெறவுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெற 8. 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டு வந்த நிலையில், கடைசி தேதி ஜூன் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் (www.skilltraining.tn. gov.in) பதிவு செய்ய வசதி இல்லாத மாணவா்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 134 உதவி மையங்கள் மூலமாக சோ்க்கைக்கான பதிவைச் செய்யலாம். இந்த மையங்களின் பட்டியல், தொலைபேசி விவரங்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், மின்னஞ்சல் முகவரியிலும் (onlineitiadmission@gmail.com), 94990 55612 என்ற கைப்பேசி எண்ணிலும் தெளிவுகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

SCROLL FOR NEXT