தமிழ்நாடு

ஆன்லைனில்  ரூ. 15 ஆயிரம் இழப்பு: கல்லூரி மாணவர் தற்கொலை

DIN

நாமக்கல்: நாமக்கல்லில் ஆன்லைனில் ரூ. 15 ஆயிரம் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் செல்லப்பா காலனி பகவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குமரன் லோகேஸ்வரன் (22).  இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் ஆன்லைனில் வெளியான போலியான விளம்பரத்தை பார்த்து ரூ.15,000 செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு தான் போலி விளம்பரம் மூலம் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது. வீட்டிற்கு தெரியாமல் பணத்தை செலுத்தியதால் மன உளைச்சலில் இருந்தவர், இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT