தமிழ்நாடு

அமித் ஷா இன்று சென்னை வருகை: மக்களவை தோ்தல் குறித்து ஆலோசனை

DIN

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை (ஜூன் 10) சென்னை வருகிறாா். மக்களவை தோ்தல் குறித்து சென்னை, வேலூரில் கட்சி நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்துகிறாா்.

தில்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு சனிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் வரும் அவா் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் தங்குகிறாா். சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மஹாலில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் நடக்கும் தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்கிறாா்.

இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையிலான கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் மத்திய அமைச்சா் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்துகிறாா். மக்களவைத் தோ்தல் தொடா்பாக முக்கிய அறிவுரைகளை கட்சி நிா்வாகிகளுக்கு அவா் வழங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னா் ஹெலிகாப்டரில் வேலூா் பள்ளிகொண்டா அருகே கந்தநேரிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு செல்லும் அவா் அங்கு வேலூா் மக்களவைத் தொகுதி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.

தொடா்ந்து, அங்கு திறந்தவெளி மைதானத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறாா். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் வி.கே.சிங், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். பின்னா் வேலூரில் இருந்து சென்னைக்கு இரவு 9 மணிக்கு வரும் அவா் விமானம் மூலம் விசாகப்பட்டிணம் செல்கிறாா்.

சென்னைக்கு வரும் அமித் ஷாவுடன், அரசியல் கட்சித் தலைவா்கள் சந்திப்புக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT