முகப்பு
தமிழ்நாடு

நாட்றம்பள்ளியில் மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய்: ஒப்பந்ததாரர் மீது புகார்

நாட்றம்பள்ளியில் மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On : 17 ஜூன் 2023, 12:39 pm IST
பகிர்:

நாட்றம்பள்ளியில் மின்கம்பத்தை அகற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எரிப்பகுதிலிருந்து சண்டியூர் வரையில் விடுபட்டு இருந்த புறவழிச் சாலைப் பணிகள், சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதற்காக மழைநீர் கால்வாயும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மின் கம்பத்தோடு மழைநீர் கால்வாய் சேர்த்து கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கழிவுநீர் கால்வாயில் மின்கம்பம் கட்டுவதும் அதே நேரத்தில் மழைநீர் கால்வாயுடன் போர்வெல் அப்புறப்படுத்தாமல் கட்டுவது போன்ற சர்ச்சைக்குரிய விஷயம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நாட்றபள்ளியில் மின் கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அத்துடன் சேர்த்து மழைநீர் கால்வாய் கட்டப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

எனவே இதுகுறித்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.