ஆவினுடன் நாங்கள் போட்டியிடவில்லை: அமுல்
ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை என்று அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை என்று அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனத்தை விட அதிக விலைக்கு அமுல், பால் கொள்முதல் செய்வதாக கூறும் தகவல் பொய்யானது என அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆவின் நிறுவனம் என்ன விலையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கு நாங்களும் கொள்முதல் செய்கிறோம். . விவசாயிகளின் பாதிப்பைத் தடுக்கவே அமுல் நிறுவனம் செயல்படும் எனவும், ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படாது என்று அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கும் நபர்கள், அமுல் நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி இருந்தார்.
இதையும் படிக்க: நீட் - 2023 தேர்வு முடிவுகள் எப்போது?
இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை என்று அமுல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.