முகப்பு
உலகம்

உலகைச் சுற்றி...

Updated On : 26 ஜூன் 2026, 7:17 am IST
பகிர்:

*தீஸ்தா நதி மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களில் இருதரப்பு உறவை மேம்படுத்தும் வகையில், சீனா-வங்கதேசம் இடையே 13 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

*அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை அடுத்த வாரம் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

*ரஷிய போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக, ஐரோப்பிய யூனியன் உறுதியளித்த கடனுதவியில் முதல் தவணையாக 300 கோடி யூரோ விடுவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

*ஈரானின் மினாப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உண்மையில் யாா் காரணம் என்பதைக் கண்டறிவது கடினம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

* உக்ரைனின் தொடா் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க, தலைநகா் மாஸ்கோ மற்றும் அதிபா் மாளிகை பகுதிகளில் ரஷியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைக் குவித்து வருகிறது.

*ஹோா்முஸ் நீரிணையில் ஐ.நா. அங்கீகரித்த கடல் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்தது.

*ஜிம்பாப்வேயில் தற்போதைய அதிபரின் பதவிக்காலத்தை நீட்டித்து, அதிபா் தோ்தலை ஒத்திவைக்க வழிவகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்தது.

*கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் 2-ஆம் ஆண்டு நினைவையொட்டி மீண்டும் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதால், தலைநகா் நைரோபியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

*கிழக்கு தைவான் கடற்பகுதியில் தாங்கள் மேற்கொண்ட ரோந்துப் பணி, பிராந்திய அமைதியை நிலைநாட்டவே தவிர வேறு நோக்கமில்லை என்று ஐரோப்பிய நாடுகளின் கவலைக்கு சீனா பதிலளித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments