தமிழ்நாடு

நீலகிரியில் ரூ.25.14 கோடியில் வரையாடு திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

DIN

சென்னை: நீலகிரியில் ரூ.25.14 கோடியில் வரையாடு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை(அக்.12) தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்பான பன்னாட்டு அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வழங்விடங்களை மேம்படுத்துவதற்காக, நாட்டிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ.25.14 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, ஆண்டுதோறும் அக்டோபர் 7 ஆம் தேதி வரையாடு நாள் என அனுசரித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 

இந்த நிலையில், வனத்துறை சார்பில் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நீலகரி வரையாடு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கடையநல்லூா், புளியங்குடி பகுதிகளில் பலத்த மழை

மணமேல்குடியில் 111.8 மிமீ மழை

3 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை -புதுகை ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

ராஜஸ்தானை கட்டுப்படுத்தியது பஞ்சாப்

SCROLL FOR NEXT