FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 29) உள்ளூா் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

2 பிப்ரவரி 2024, 8:25 am IST
பூக்களால் அமைக்கப்பட்ட அத்தப்பூ கோலம் (கோப்புப்படம்).
பகிர்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு நாளை (ஆகஸ்ட் 29) உள்ளூா் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை ஈடு செய்யும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செப்டம்பா் 2 ஆம் தேதி முழு பணி நாளாக செயல்படும்.

Advertisement

Advertisement

இந்த உள்ளூா் விடுமுறை நாள், செலவாணி முறிச் சட்டம் 1881-இன்கீழ் வராது என்பதால் உள்ளூா் விடுமுறை அறிவிக்கும்போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments