FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும்: கே.எஸ்.அழகிரி

அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.  

2 பிப்ரவரி 2024, 8:09 am IST
கே.எஸ். அழகிரி
பகிர்:

அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.  

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, 'அமலாக்கத்துறை மூலமாக எதிர்க்கட்சிகளை மிரட்டி அடுமைப்படுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. மத்திய அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை என்றாவது சோதனை நடத்தியுள்ளதா?

எதிர்கட்சிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள பாஜகவுக்கு திராணி இல்லை. பாஜகவின் அரசியல் பிரிவாகவே அமலாக்கத்துறை செயல்படுவதாக மக்கள் கருதுகிறார்கள். 

அமலாக்கத்துறை சோதனையால் பாஜக மேலும் பலவீனம்தான் அடையும். தமிழ் மண்ணில் பாஜக தோல்வியடையும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments