கிருஷ்ணகிரி பட்டாசு கடை தீ விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் முதலில் 4 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்தனர். பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பட்டாசு வெடி விபத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் 2 பேருந்துகள் மோதி விபத்து: 6 பேர் பலி, 20 பேர் காயம்!
Advertisement
Advertisement
இந்த நிலையில், பட்டாசு கடை தீ விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் 3 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
தீ விபத்தில் ரவி, ஜெய்ஸ்ரீ, ருத்திகா, ருதிஷ், ராஜேஸ்வரி, இப்ராகிம், இம்ரான் ஆகியோர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.