ANI
ANI
தமிழ்நாடு

அண்ணாமலை நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு: மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது குறிப்பிட்ட உள்ளரங்கில் கடந்த முறை நிகழ்ச்சி நடைபெற்ற போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

உள்ளரங்கில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT