கோப்புப் படம்.
கோப்புப் படம். 
தமிழ்நாடு

திருச்சியில் ஜெ.பி.நட்டா வாகனப் பேரணிக்கு அனுமதி- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

DIN

திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை மாலை பாஜக நிா்வாகிகள், தொண்டா்களுடன் திருச்சி காந்தி சந்தையிலிருந்து மலைக்கோட்டை வரை 1.2 கி.மீ. தொலைவு வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டுள்ளது.

வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு: பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டாவின் வாகனப் பேரணி நடத்த பாஜக சாா்பில் கடந்த 4 ஆம் தேதி இரவு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசல், குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த இடம் எனக் காரணம் காட்டி, திருச்சி மாநகரக் காவல்துறை சனிக்கிழமை பிற்பகலில் அனுமதி மறுத்துள்ளது.

45 மணிநேரத்துக்கு முன்பாக அனுமதி கோரியிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுப்பதாக பாஜகவினா் குற்றஞ்சாட்டினர். இதனிடையே திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகனப் பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. 1.5 கி.மீ. அளவிற்கு மாலை 4 மணி முதல் 6 மணி வரை வாகனப் பேரணி நடத்த நிதிமன்றம் தரப்பில் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT