தமிழ்நாடு

வாக்குப்பதிவு நாளில் வெப்ப அலை வீசக்கூடும் -வானிலை மையம் எச்சரிக்கை!

DIN

தமிழகம், புதுச்சேரியில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் வெப்பத்தை தணிக்கும் விதமாக கோடை மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ஆம் தேதி தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நாளை(ஏப். 18) மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.19-ஆம் தேதி ஆகிய இரு நாள்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வியாழன்(ஏப். 18) மற்றும் வெள்ளி(ஏப். 19) ஆகிய இரு நாள்கள் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை ஊராட்சிகளில் மண் பரிசோதனை முகாம்

பொன்னமராவதி அருகே விபத்து: இருவா் படுகாயம்

கந்தா்வகோட்டையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சீரமைப்பு

வைகாசி பெருந்திருவிழா கண்டியூா், ஆதனூரில் கோயில் தேரோட்டம்

மேக்கேதாட்டு அணை தொடா்பான நகல் எரிப்பு போராட்டம்

SCROLL FOR NEXT