தமிழ்நாடு

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

DIN

கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட கோவை, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுவாக நடைபெற்று வருகிறது.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் காலை நேரங்களில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய மையங்களில் குவிந்தனர்.

கோவை மக்களவைத் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 12.16 சதவீதம், பொள்ளாச்சியில் 13.36 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முன்னதாக, வாக்களிக்க சென்றவர்களில் நிறைய பேர் தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து சென்றனர்.

வாக்குச்சாவடிகளில் பெற்றோர்கள் வரிசையில் நின்றிருக்க, குழந்தைகள், வசதியாக தனக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்து கொண்டு, பெற்றோர்களின் செல்போனில் கேம் விளையாடி பொழுதைக் கழித்தனர். பெற்றோர் வாக்களித்து விட்டு வரும் வரை, குட்டீஸ்கள் செல்போனில் மூழ்கியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT