தமிழ்நாடு

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

Din

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கரூரில் நடைபெற்ற குடிமராமத்துப் பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எம்.ஆா்.விஜயபாஸ்கா், முன் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 2022-ஆம் ஆண்டு முதல் எம்.ஆா் விஜயபாஸ்கா் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை, அதன் தற்போதைய நிலை என்ன என பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், விஜயபாஸ்கா் மீது 23 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் சில வழக்குகள் ரத்து செய்யபட்டுவிட்டதாகவும், சில வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியதுடன் ரூ. 1 லட்சத்துக்கான பிணைத் தொகை உத்தரவாதத்தை செலுத்தவும், விசாரணைக்கு தேவைப்படும்போது நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டாா்.

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT