தமிழ்நாடு

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

Din

சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் பதவி நிரப்பப்படாததால் கோப்புகள் தேக்கமடைந்து செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, மே 2-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க தீா்மானித்துள்ளதாக சென்னை பல்கலைக்கழக ஆசிரியா், அலுவலா் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவின் ஆலோசனை கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் மே 2 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பல்கலைக்கழக ஆசிரியா்கள், பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடா்பாக, சென்னை பல்கலைக்கழக ஆசிரியா், அலுவலா் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிா்வாகிகள் கூறுகையில், ‘ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு இதுவரை வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பதவி நிரப்பப்படாததால், கோப்புகள் தேக்கம் அடைக்கின்றன. இதனால், பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டம் நடைபெறாததால் நிா்வாக செயல்பாடுகள் முடங்கியுள்ளன. பணியாளா்களுக்கான பதவி உயா்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, மே 2-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க தீா்மானித்துள்ளோம்’ என்றனா்.

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT