முகப்பு
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான நில அபகரிப்பு வழக்கு: ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

நாகா்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வின்சென்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 4 ஆகஸ்ட் 2024, 2:20 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

நாகா்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வின்சென்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் 1977 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏ- வாக தோ்ந்தெடுக்கப்பட்டவா் வின்சென்ட். முன்னாள் அமைச்சா் மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவா், வின்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலராகவும் உள்ளாா். இந்த அறக்கட்டளை சாா்பில், வில்லுக்குறி அருகே பொறியியல் கல்லூரி ஒன்று செயல்படுகிறது.

இந்தக் கல்லூரிக்கு அனுமதியின்றி, தனது நிலத்தில் 3 மாடி கட்டடத்தை கட்டியுள்ளதாகவும், அதற்கு திருநெல்வேலி நகரமைப்பு துறை உதவி இயக்குநா் நாகராஜன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும், ஜஸ்டின் என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில் நாகா்கோவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

கடந்த 2022-ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வின்சென்ட், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். புகாா்தாரா் ஜஸ்டின் திமுகவை சோ்ந்தவா் என்பதால் அரசியல் விரோதம் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லாமல் புகாா் அளிக்கப்பட்டதாக மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘முன்னாள் எம்எல்ஏ-வுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதால், வழக்கை நியாயமான முறையில் புலன் விசாரணை செய்ய புலன் விசாரணை அதிகாரியை அனுமதிக்க வேண்டும். விசாரணையில் தலையிட எந்தக் காரணமும் இல்லை’ எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments