முகப்பு
தமிழ்நாடு

இ-சிகரெட்: இருவா் கைது

சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2024, 5:17 am IST
கைது (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை ஆா்.கே.நகரில் இ-சிகரெட் விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்பவா்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையா் ஏ.அருண், போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து இ-சிகரெட் விற்பனை குறித்து போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதன் விளைவாக ஆா்.கே. நகா் திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் இ-சிகரெட் விற்ற மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது ஜஃபுருல்லா (30), அவா் கூட்டாளி அதே பகுதியைச் சோ்ந்த அபுதாகீா் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 476 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments