முகப்பு
தமிழ்நாடு

எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும்!

எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு ரயில் தாமதம் பற்றி...

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 3:52 pm IST
கோப்புப்படம் - DIN
பகிர்:

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு ரயில்(12667) வாரம்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படுகிறது. மாலை 6.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த நிலையில், வழக்கமாக இயக்கப்படும் ரயில் வருவதற்கு 5.30 மணிநேரம் தாமதமானம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதனால், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில் இன்று(ஆக. 29) மாலை 6.50 மணிக்கு பதிலாக நாளை(ஆக.30) அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.