முகப்பு
தமிழ்நாடு

நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

புதன்கிழமை (டிச.11) நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு...

Updated On : 10 டிசம்பர் 2024, 4:10 pm IST
பகிர்:

வங்கக்கடலில் நிலவும் புயல்சின்னம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய நிலநடுக்கோட்டையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்), மேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை (டிச.10) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இது, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை (டிச.11) இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதனால், புதன்கிழமை (டிச.11) நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து அந்த மையம் சாா்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

  • கடலூர்

  • நாகப்பட்டினம்

  • தஞ்சாவூர்

  • திருவாரூர்

  • புதுக்கோட்டை

  • மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும்

  • காரைக்கால் பகுதிகளிலும் நாளை (டிச.11) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விழுப்புரம்

  • திருச்சி

  • அரியலூர்

  • பெரம்பலூர்

  • கள்ளக்குறிச்சி

  • சிவகங்கை

  • ராமநாதபுரம்

  • சென்னை

  • திருவள்ளூர்

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்

  • புதுச்சேரி பகுதிகளிலும் நாளை (டிச.11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments