முகப்பு
தமிழ்நாடு

சின்ன திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை!

சின்ன திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 31 டிசம்பர் 2024, 10:05 am IST
சித்ரா / காமராஜ் - கோப்புப் படங்கள்
பகிர்:

சின்ன திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன திரையில் பிரபல நடிகையாக இருந்த நடிகை சித்ரா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூந்தமல்லியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சித்ராவின் தந்தையான காமராஜ் அபிராமபுரம் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். சென்னை திருவான்மியூர் ராஜாஜி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்கு வந்த உறவினர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.

நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தனது மகளான நடிகை சித்ரா தற்கொலை செய்த நிலையில் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருவான்மியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments