என் சிரிப்புக்குக் காரணம் கணவர்தான்! ஆஹா கல்யாணம் நடிகை அக்ஷயா உருக்கம்!
கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு நடிகை அக்ஷயா உருக்கம் தெரிவித்துள்ளது குறித்து...
எனது சிரிப்புக்குக் காரணம் என் கணவர்தான் என சின்ன திரை நடிகை அக்ஷயா உருக்கம் தெரிவித்துள்ளார்.
அன்பும் அக்கறையும் கொண்டு என் உலகத்தை பிரகாசமாக்கும் அனைத்து முயற்சிகளையும் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் செய்யும் கணவன் கிடைத்ததற்கு என்றுமே நன்றிக்கடன்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் 2023 மார்ச் முதல் 2025 அக்ரோபர் வரை ஆஹா கல்யாணம் தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் நடிகை அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும் விக்ரம் ஸ்ரீ நாயகனாகவும் நடித்தனர்.
Advertisement
Advertisement
இவர்கள் மட்டுமின்றி மெளனிகா, விபிஷ் அஷ்வந்த், காயத்ரி ஸ்ரீ, பவ்யா ஸ்ரீ, ஆர்.ஜி. ராம் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களின் நடிப்பும் தொடருக்கான ரசிகர்களை அதிகரித்தது.
இதில், மகாலட்சுமி என்ற பாத்திரத்தில் அக்ஷயா நடித்து வருகிறார். தனது உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் வசீகரமான தோற்றத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த அக்ஷயா, சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்.
தனது நீண்டகால நண்பரும் இயக்குநருமான ஜெய்னு ஜெய் என்பவரை காதலித்து வருவதாகவும் அவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தையும் அக்ஷயா பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், தனது சிரிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம் தனது கணவர்தான் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கணவருடன் ஏலகிரிக்குச் சென்றுள்ள அக்ஷயா அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், இப்படங்களில் உள்ள என்னுடைய எல்லா சிரிப்புகளுக்குப் பின்னால் அன்போடும் அக்கறையோடும் என் உலகத்தை பிரகாசித்துக்கொண்டிருக்கும் கணவரே காரணம் எனப் பதிவிட்டுள்ளார். இதற்காக என்றுமே நன்றிக்கடன்பட்டுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் அக்ஷயாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.