தமிழ்நாடு

தேமுதிக, மாநிலங்களவை சீட் கேட்பதில் என்ன தவறு? - பிரேமலதா விஜயகாந்த்

Sasikumar

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 14 மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை வேண்டுமென நான் கேட்கவில்லை; ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூறிய கருத்தையே தெரிவித்தேன். யாருடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

வெளிப்படையாகத்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம். கூட்டணி தலைமை ஏற்றிருப்பவர்கள்தான் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அதன்பிறகு கட்சியின் நிலைப்பாடு பற்றி தெரிவிப்போம். கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தமிழ்நாட்டில் அனைத்து கட்சியிலும் மாநிலங்களவை எம்.பி. உள்ளனர்.

அதனை கேட்கும் உரிமை தேமுதிகவுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக தேமுதிக இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது. அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணிக்கு இழுப்பதற்கு முயற்சித்து வருகின்றன.

அதனால், எந்தக் கட்சியுடன் இணையலாம் என்பது தொடா்பாக மாவட்டச் செயலா்களுடன் பிரேமலதா அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT