முகப்பு
தமிழ்நாடு

புதுவை - குமரி ரயில் தாமதம்

புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) தாமதமாக இயக்கப்படும்

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:15 am IST
பகிர்:

புதுச்சேரி - கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) தாமதமாக இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல் 12.05 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 2.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். இந்த ரயிலுக்கான இணைப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) தாமதமாக இயக்கப்படுவதால் கன்னியாகுமரி விரைவு ரயில் 2 மணி 25 நிமிஷங்கள் தாமதமாக (பிற்பகல் 2.30) மணிக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.