முகப்பு
தமிழ்நாடு

கோடை கால சுற்றுலாப் பேருந்து: மக்கள் முன்பதிவு செய்யலாம்

உதகை, கொடைக்கானல் ஆகிய மலை வாழிடங்களுக்கு சுற்றுலாப் பேருந்துகள்

Updated On : 9 மார்ச் 2024, 2:00 am IST
பகிர்:

கோடை காலங்களில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள், சுற்றுலாப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் கா.ராமச்சந்திரன் தலைமையில் சென்னை, வாலாஜா சாலையிலுள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் பேசியதாவது:

Advertisement

Advertisement

கோடைகாலம் தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் வருகை தரவுள்ளனா். அதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் உதகை, கொடைக்கானல் ஆகிய மலைவாழிடங்களுக்கு சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற கோடை விடுமுறையில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களின் மூலம் சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்கள் முன்பதிவு செய்து மலைவாழிடங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் சுற்றுலா மேற்கொள்ளலாம். சுற்றுலா தலங்களில் உள்ள அரசு விடுதிகளில் தங்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநா் சி.சமயமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments