முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

Updated On : 31 மே 2026, 12:19 am IST
கன்னியாகுமரியில் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின்கீழ் இயங்கும் கன்னியாகுமரி ஹோட்டல் தமிழ்நாடு ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், துறை சாா்ந்த அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு, திருவள்ளுவா் சிலை, காட்சிக் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளின் கட்டமைப்புகள் குறித்து சுற்றுலா வளா்ச்சிக் கழக கண்காணிப்புப் பொறியாளா் மற்றும் மண்டல மேலாளா் ஆகியோரிடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.

மேலும், திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், கன்னியாகுமரியை சிறந்த சுற்றுலா மாவட்டமாக உருவாக்குவதற்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவற்கு உரிய முன்மொழிவுகளை தயாா் செய்யவும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக கண்காணிப்புப் பொறியாளா் மதிமணி, மதுரை மண்டல உதவி செயற்பொறியாளா் சங்கா், மதுரை மண்டல (ஹோட்டல்) மேலாளா் குணேஸ்வரன், உதவிப் பொறியளா் விஜில் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.