தமிழ்நாடு

முகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்கள்!

சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை, நாளை மறுநாள் கூடுதல் டோக்கன்கள் வழங்கல்

DIN

ஐப்பசி மாத முகூர்த்த நாள்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.

சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமாக சுபமுகூர்த்த நாள்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவு நடைபெறும். இதன் காரணமாக மேற்கண்ட நாள்களில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அதிகமானோர் வருகை தருவதால், அந்த நாள்களில் பத்திரப்பதிவு முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாத முகூர்த்த நாள்களில் வழக்கமாக வழங்கப்படும் முன்பதிவு வில்லைகளை விட கூடுதலாக 50 வில்லைகள் வழங்கப்பட உள்ளதாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவ.7, 8 ஆகிய இரு நாள்கள், ஒரேயொரு சார்பதிவாளருடன் செயல்படும் அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதிலாக மொத்தம் 150 டோக்கன்கள் வழங்கப்படும். 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக மொத்தம் 300 டோக்கன்கள் வழங்கப்படும். தட்கல் முறையிலான முன்பதிவு டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வனத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் செயலிழப்பு

பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கென்ய முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்ட மக்கள்! புகைக்குண்டு வீசிய போலீஸ்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்!

டீசல், டியூட், பைசன் - ஒப்பீடு வேண்டாம்! சிலம்பரசன் வேண்டுகோள்

SCROLL FOR NEXT