FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்

முகூா்த்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுக்காக வெள்ளிக்கிழமை (மே 29) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 மே 2026, 4:22 am IST
சார்-பதிவாளர் அலுவலகம் - file photo
பகிர்:

முகூா்த்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுக்காக வெள்ளிக்கிழமை (மே 29) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பதிவுத் துறைத் தலைவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுபமுகூா்த்த தினமாக கருதப்படும் நாள்களில் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். மக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய தினங்களில் ஆவணப் பதிவுக்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

அந்த வகையில், வைகாசி மாத சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (மே 29) ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், இரு சாா்-பதிவாளா்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.

அதிகமாக ஆவணப் பதிவு நடைபெறும் இடங்களில் வழக்கமான டோக்கன்களுடன் 12 தட்கல் டோக்கன்கள் வழங்கும் நடைமுறை உள்ளது. அத்தகைய இடங்களில் வெள்ளிக்கிழமை 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments