முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,493 கன அடியிலிருந்து வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 31 ஆகஸ்ட் 2025, 6:16 pm IST
மேட்டூர் அணை
பகிர்:

கு. இராசசேகரன்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மாலை 4:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியின் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(ஆக. 31) மாலை 4:00 மணிக்கு வினாடிக்கு 29,360 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 20,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 118.86அடியாகவும் நீர் இருப்பு 91.66 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments