மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...
காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 4,312 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக இன்று(ஜூன் 2) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 2,369 கன அடியிலிருந்து 4,312 கன அடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.26 அடியிலிருந்து 79.53 அடியாக உயர்ந்துள்ளது . நீர் இருப்பு 41.49 டிஎம்சி ஆக உள்ளது.
Due to rainfall in the catchment areas of the Cauvery River, the inflow into the Mettur Dam has increased to 4,312 cubic feet per second.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.