ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு திடீர் உடல்நலக் குறைவு.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று(மார்ச் 16) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மேலும், அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.