முகப்பு
தமிழ்நாடு

‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தொடக்கம்

‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 30 மே 2025, 1:36 am IST
பகிர்:

‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ எனும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 17,116 கிராமங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக திருவாரூா் மாவட்டம் மாணிக்கமங்கலம் எனும் கிராமத்தில் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இந்தத் திட்டம் மூலம், வேளாண் விரிவாக்க சேவைகள், அரசின் திட்டங்கள் ஆகியன விவசாயிகளின் கிராமத்திலேயே வழங்கப்படும். திட்டத்துக்கான முகாம்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும். இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் நான்கு கிராமங்கள் வீதம் மாதந்தோறும் 1,540 கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments