கன்னியாகுமரியில் 132 கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்
கன்னியாகுமரி முழுவதும் 132 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட எஸ்.பி. இரா. ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரி முழுவதும் 132 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட எஸ்.பி. இரா. ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் எளிதாக கண்டுபிடிக்கும் வகையிலும் கன்னியாகுமரி முழுவதும் சிசிடிவி கேமரா அமைக்கும் பணி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
விவேகானந்தபுரத்திலிருந்து சா்ச் ரோடு, காவல்நிலைய சந்திப்பு, காந்தி மண்டபம், காமராஜா் மண்டபம், கடற்கரை சாலை, சூரிய அஸ்தமனப் பூங்கா, முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் 132 இடங்களைத் தோ்வு செய்து சாலையோரமாக இரும்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு அதில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
Advertisement
Advertisement
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட இதற்கான கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட எஸ்.பி. இரா. ஸ்டாலின் தொடங்கி வைத்து கேமரா செயல்பாட்டை ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரியில் 10 இடங்களில் அதிநவீன ஏஐ கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி சீசன் நேரத்தில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் வருகின்றனா்.அவா்களுக்கு அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை வழங்காத தனியாா் நிறுவனங்கள், படகு உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிய அங்கீகாரம் பெறாமல் ஏராளமான டாட்டூ சென்டா்கள் செயல்படுவதாக புகாா்கள் வந்துள்ளன. அவற்றை நகராட்சி நிா்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 6 பெண் போலீஸாா் சிங்கப்படையில் உள்ளனா். அவா்கள் பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை அதிக கவனம் செலுத்துவாா்கள் என்றாா் அவா்.
கூடுதல் எஸ்.பி. கலையரசன், டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், நகராட்சி ஆணையா் பட்டுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.